ஆஸ்திரேலிய வானில் இன்று இரவு Strawberry moon என அழைக்கப்படும் supermoon காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 24ஆம் தேதியான இன்று, சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருவதையடுத்து ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் இந்த நிலாவை Strawberry Moon என்று அழைக்கின்றனர்.
இந்த நிலா Strawberry பழத்தின் எந்தவொரு அம்சத்தையும் கொண்டிருக்காது எனவும், ஜூன் மாத நிலவின் தோற்றத்தை Strawberry பழ அறுவடை பருவத்துடன் இணைத்து வடகிழக்கு அமெரிக்காவின் Algonquin பூர்வகுடியினர் இந்த பெயரை வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று வானில் தோன்றும் இந்த ‘‘Strawberry நிலா" ஆஸ்திரேலியாவில் வெள்ளி அதிகாலை 4.39 மணிமுதல்(AEST) மிகத் தெளிவாகத் தெரியும் என குறிப்பிடப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
