SKIP TO MAIN CONTENT

இரண்டு புதிய காய்ச்சல் தடுப்பூசிகள் அறிமுகம்

இந்த ஆண்டு இரண்டு புதிய மற்றும் சக்தி வாய்ந்த காய்ச்சல் தடுப்பூசிகளை அரசு அறிமுகப்படுத்துகிறது. இவ்வருடம் இத்தடுப்பூசிகளை வயதானவர்கள் இலவசமாக தங்களின் குடும்ப வைத்தியரிடம் போட்டுக்கொள்ளலாம்.

The federal government will spend $31 million on a flu vaccination program this year.
The federal government will spend $31 million on a flu vaccination program this year. Source: AAP

1 min read

Published

By Selvi



Skip to article content

ஆஸ்திரேலியாவில் சென்ற வருடம் காய்ச்சலினால் 1100 பேர் மரணமடைந்திருந்தனர்.  அதில் பெரும்பாலானவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்.  ஆகவே இந்த வருடம் அவ்வாறு மரணம் நிகழாமல் தடுக்க  FluAd மற்றும் FluZone என்கின்ற இப்புதிய இரண்டு தடுப்பூசிகளை அரசு வழங்க உள்ளது.

வயதானவர்களுக்கு  கடந்தாண்டு காய்ச்சலுக்காக வழங்கப்பட்ட தடுப்பூசியினால் அவர்களுக்குள் உருவான நோய் எதிர்ப்பு சக்தி குறையத் துவங்கியதாலேயே பலர் காய்ச்சலுக்கு பழியானார்கள் என்று தலைமை மருத்துவ அதிகாரி Brendan Murphy கூறினார்.  ஆகவே இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள இவ்விரண்டு புதிய தடுப்பூசிகளால் குறிப்பாக வயோதிபர்கள் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now