SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய வானில் இன்று தோன்றும் ‘பிங்க் மூன்’

NASA/Joel Kowsky
Source: NASA/Joel Kowsky

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலிய வானில் இன்று இரவு ‘சூப்பர் பிங்க் மூன்’ பிரமாண்டமாக காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் நிலவு, இன்று பூமிக்கு மிக அருகில் வருவதால் வழக்கமாக நாம் பார்ப்பதைவிடவும் பெரியதாகவும், பிரகாசமாகவும், தெளிவாகவும் காணப்படும்.

இந்த நிலவு பிங்க் நிறத்தில் தோற்றமளிக்காது எனவும், அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் பிங்க் நிறமுள்ள phlox பூக்கள் பூக்கத் தொடங்கும் காலத்தில் குறித்த முழு நிலவு தோன்றுவதால் இதற்கு ‘பிங்க் மூன்’ என்ற பெயரை அங்குள்ள பூர்வகுடிகள் சூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று வானில் தெரிய இருக்கும் இந்த ‘‘சூப்பர் நிலவை" ACT, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் இன்று அதிகாலை 01.22 மணிக்கு பார்வையிடலாம்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று  இரவு 11.22 மணிக்கும் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் Northern Territory-இல் வாழ்பவர்கள் அதிகாலை 12.52 மணிக்கும் இதனைப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now