SKIP TO MAIN CONTENT

ஆத்திரத்தின் உச்சியில் சிட்னி பயணிகள்

பல சிட்னி ரயில் தொடரூர்திகள் இன்று ஒழுங்காக ஓடாத காரணத்தால், விரக்தியடைந்த பயணிகள் சிட்னி முழுவதுமும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் வரிசையாகக் காத்திருக்கிறார்கள்.

Commuters stranded after breakdown at Sydney's Town Hall station
Commuters stranded after breakdown at Sydney's Town Hall station Source: SBS Mandarin: Samuel Yang

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan, Adam Marsters



Skip to article content

சிட்னி Townhall (நகர மண்டப) ரயில் நிலையத்தில் ஒரு ரயில் ரயில்செயலிழந்ததைத் தொடர்ந்து, சிட்னி நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலான இடமாக மாறியுள்ளது.

இன்று காலை 5.20 மணியளவில் சிட்னி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள Townhall மற்றும் North Sydney புறநகருக்கிடையிலான பாதை மூடப் பட்டது.

மேற்கு சிட்னி செல்லும் T1 Western line மற்றும் மேற்கு சிட்னி நகர் T2 Inner-west, மற்றும் Leppington line, Bankstown செல்லும் T3, விமான நிலையம் செல்லும் T8, வட பகுதிக்குச் செல்லும் T9 Northern line ஆகியவையும் இதனால் பலத்த தாமதங்களை எதிர்கொண்டுள்ளது.

 

அவர்களது பணியாளிகள் அவசரமாக திருத்த வேலைகள் செய்து கொண்டிருப்பதாக T1 Sydney Trains ட்விட்டர் மூலமாக,  உறுதிப்படுத்தினர்.

தொழில்நுட்ப வல்லுநர்களின் சிறந்த முயற்சிகள் எடுத்த போதும், சிட்னி பயணிகள் வெள்ளிக்கிழமை காலை தமது பயணம் தாமதமாவது குறித்து கூடுதல் விரக்தியை வெளிப்படுத்தினார்கள்.

சிட்னியின் உள்-மேற்கு பகுதியில் உள்ள Newtown என்ற இடத்திலிருந்து பயணிப்பவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்காக மீண்டும் தெருவுக்குத் தள்ளப்பட்டனர்.

பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இருப்பினும் மிக நீண்ட வரிசைகளில் தாம் நிற்கவேண்டிதயுள்ளது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

சிட்னி ரயில் பராமரிப்பு நடைமுறைகளை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அதன் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயணிகள் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய கூடுதல் பயண நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.

வாடகை வாகன சேவை Uberன் விலை வழக்கமான விலையை விட அதிகரித்துள்ளது குறித்து சில பயணிகள் கோபத்துடன் கருத்து பகிர்ந்துள்ளார்கள்.

ஒரு எடுத்துக்காட்டாகக, சிட்னி நகரத்திலிருந்து Artarmon என்ற புறநகர் செல்ல, பயணிகளுக்கு 106.05 டொலர் செலவாகும் - இது வழக்கமான கட்டணத்தை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாகும்.

 

சிட்னி ரயில் ப்யணிகளுக்கு இன்று நடந்தது ஒரு புதிய தலைவலி அல்ல.  சமீபத்திய காலத்தில் பல சிக்கல்களை அவர்கள் எதிர் நோக்கியுள்ளார்கள்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஓட்டியில்லாத மெட்ரோ ரயில், செவ்வாயன்று இயந்திர கோளாறு காரணமாக சேவைகளில் சீர்குலைவைக் கண்டது.  சேவை ஆரம்பித்த மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக ஏதாவது சிக்கலை எதிர் கொண்டிருப்பது பயணிகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Uber நிறுவனத்திடம் SBS செய்திப்பிரிவினர் கருத்து கோரியுள்ளார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now