SKIP TO MAIN CONTENT

சிட்னி வரும் கப்பல் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

சிட்னி வரும் கப்பல் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

NSW Health says a risk assessment will be completed before each ship's arrival into the harbour city
Source: SBS

1 min read

Published

Updated

By Raysel

Source: SBS


Skip to article content

சர்வதேச சுற்றுலா கப்பல் வழியாக சிட்னி வந்தடையும் சுற்றுலா பயணிகளுக்கு coronavirus COVID-19 உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை சிட்னி துறைமுகத்தில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 

Coronavirus COVID-19 நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த பரிசோதனைகளை நடத்த நலத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சிட்னி விமான நிலையத்தில் வந்தடையும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுவதுபோன்றே சிட்னி துறைமுகத்திலும் நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Coronavirus COVID-19 தொற்று இருப்பதான சந்தேகம் எழுந்தால் அவர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நலத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.    

 

இந்த திட்டத்தின் அடிப்படியில் இன்று நியூசிலாந்து நாட்டிலிருந்து சிட்னி வந்தடையும் சுற்றுலா கப்பலின் பயணிகள் coronavirus COVID-19 உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.    


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now