கொரோனா அச்சத்தை தொடர்ந்து இழுத்து மூடப்பட்ட சிட்னி Opera House எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி பொதுமக்கள் வருகைக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட சிட்னி Opera மண்டபத்தில் வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் Opera House-இல் தொடர்ச்சியாக 15 நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் தற்போது செய்யப்பட்டிருக்கின்றன என்றும், ரசிகர்கள் மற்றும் வர்த்தகர்களின் பேருதவியுடன் மண்டபத்தை மீளத்திறந்து காட்சிகளை பழையபடி ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் Opera House நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
Opera House-இல் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகள் உள்ளூர் கலைஞர்களுக்கு புத்துணர்ச்சிமிக்க ஆரம்பத்தை வழங்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
