SKIP TO MAIN CONTENT

Sydney to Hobart yacht race: 75 ஆண்டு கால பாரம்பரிய படகோட்டும் போட்டி முதல் தடவையாக ரத்து!

A supplied image obtained on Saturday, December 28, 2019, shows Comanche arriving to Hobart to claim Line Honours victory at the 2019 Rolex Sydney Hobart. (AAP Image/Supplied by Rolex, Carlo Borlenghi) NO ARCHIVING, EDITORIAL USE ONLY
Comanche took out the 75th annual Sydney to Hobart race in 2019. This year's race has been cancelled. Source: ROLEX via AAP

1 min read

Published

Updated


Skip to article content

சிட்னிக்கும் தஸ்மேனியாவின் ஹோபார்ட்டுக்கும் இடையில் இடம்பெறவிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 76 ஆவது படகோட்டும் போட்டி-Sydney to Hobart yacht race இந்த வருடம் நடைபெறாது என்றும் இந்தப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு 75 வருடங்களில் முதல்தடவையாக ரத்து செய்யப்படுகிறது என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சிட்னியில் பரவத்தொடங்கியிருக்கும் கொரோனா தொற்றுக்காரணமாக மாநிலம் விட்டு மாநிலத்துக்கு வருகின்ற படகுச்சவாரிப் போட்டியாளர்களை தங்களது மாநிலத்துக்குள் அனுமதிப்பதில் உள்ள சுகாதாரச்சிக்கலை சமாளிக்கமுடியாது என்று தஸ்மேனிய அரசாங்கம் தெரிவித்ததையடுத்து இந்த அறிவிப்பு இரண்டு மாநில போட்டி ஏற்பாட்டாளர்களாலும் கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிட்னிக்கும் தஸ்மேனியாவுக்கும் இடையிலான சுமார் 630 கடல்மைல் தூரத்தை கடக்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படகோட்டும் போட்டி ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகும்.

1945 ஆம் ஆண்டுமுதல்  இந்த படகோட்டும் போட்டி நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now