SKIP TO MAIN CONTENT

சுறாவிடம் கடிபட்டவர் உயிர் தப்பினார்.

சிட்னியில் வெள்ளை சுறாவின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். 25 வருடங்களுக்குப் பின் சிட்னியின் Botany Bay பகுதியிலுள்ள La Perouse கடற்கரைப் பகுதியில், சுறா தாக்குதல் நடைபெற்றுள்ளது. La Perouse கடற்கரைகள் தற்போது மக்களின் பாவனைக்கு மூடப்பட்டுள்ளன.

White sharks
Supplied undated image Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

சிட்னி பெண் ஒருவர் Botany Bay பகுதியில் சுறாவின் தாக்குதலுக்குள்ளாகியும் உயிர் தப்பியுள்ளது அவர் செய்த புண்ணியம் என்று Randwick மேயர் Lindsay Shurey கூறியுள்ளார்.  இந்த இடத்தில் மனிதரை சுறா தாக்கிய சம்பவம்,  25 ஆண்டுகளுக்குப் பின்னர், நேற்று, வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.  55 வயதான ஒரு பெண், நீந்தச் சென்ற போது, சுறா தாக்கியுள்ளது.  20 மீட்டர் தண்ணீருக்குள் இருந்த அவரின் வலது முழங்காலை சுறா கடித்திருந்தாலும் முதலுதவி வழங்குபவர்களால் காப்பாற்றப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

சத்திரசிகிச்சை செய்யப்பட்ட இந்த 55 வயதுப் பெண், அதிர்ஷ்டவசமாக கால்களை இழக்கவேண்டியதில்லை என்று மருத்துவர் அறிவித்துள்ளார்.  இவரைக் கடித்த சுறா வெள்ளை இன சுறாவாக இருக்கும் (White Shark) என விவசாயத் தொழில்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Randwick மேயர் Lindsay Shurey, தான் அந்த இடத்தில் 35 வருடங்களாக வசிப்பதாகவும், இப்படியான சுறா தாக்குதலைத் தான் அந்த இடத்தில் கேள்விப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Congwong, Frenchmans மற்றும் Yarra கடற்கரைகள் மக்கள் பாவனைக்கு மூடப்பட்டுள்ளன.  அந்தக் கடற்கரைகளில் Council Lifeguards பணிக்கமர்த்தப்பட்டு, மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

Sydney white shark attack survivor 'lucky' to be alive

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now