சிட்னியில் தனது தாயின் தலையைத் துண்டித்த பெண்ணுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சிட்னியின் மேற்குப் புறத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 25 வயதான Jessica Camilleri, தனது தாயாரின் தலையைத் துண்டித்து வீசியெறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் திட்டமிட்ட கொலை என்பதற்குள் அடங்காது என்றபோதிலும் மிகக்கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட மனிதப்படுகொலை எனத் தெரிவித்த நீதிபதி, Jessica Camilleri-க்கு 21 ஆண்டுகளும் 7 மாதங்களும் சிறைத்தண்டனை தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
16 ஆண்டுகளுக்குப் பின்னர் Jessica Camilleri சிறையிலிருந்து பரோலில் வெளிவருவதற்கு விண்ணப்பிக்கமுடியும்.
Jessica Camilleri-இன் மனநிலை பாதிப்பு இக்கொலைக்கு காரணமாக கொள்ளப்படவேண்டுமென அவரது சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தபோதும் நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கி உத்தரவிட்டார்.
1800 RESPECT (1800 737 732)
Lifeline 13 11 14
