SKIP TO MAIN CONTENT

சிட்னி Vivid festival ரத்து!

சிட்னி Vivid festival ரத்து!

Vivid Sydney
Source: Vivid Sydney

1 min read

Published

By Raysel

Source: SBS


Skip to article content

சிட்னியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படும் Vivid festival இம்முறை ரத்து செய்யப்படுவதாக NSW அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிவரும் பின்னணியிலும், ஐநூறுபேர் கூடும் எந்த நிகழ்வையும் யாரும் நடத்த வேண்டாம் என்று பெடரல் அரசு கேட்டுக்கொண்டிருப்பதாலும் Vivid festivalஐ ரத்து செய்யும் முடிவை NSW அரசு எடுத்துள்ளது.

எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறுவதாக இருந்த இந்த Vivid festival இந்த ஆண்டு நடைபெறாது.  

கடந்த ஆண்டு நடைபெற்ற Vivid festival நிகழ்வை உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்று சுமார் 25 லட்சம் மக்கள் கண்டுகளித்தனர். எனவே அதுபோன்ற ஒரு பெரும் கூட்டம் கூடும் என்று கணக்கிட்டு NSW அரசு ஏற்பாடுகளை செய்துவந்தது. ஆனால் இப்போது திடீரென்று Vivid festivalஐ  ரத்து செய்வது அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றாலும், பொதுமக்களின் நலன் கருதி தாம் இந்த நிகழ்வை இந்த ஆண்டு கைவிடுவதாக NSW அரசு அறிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now