பசு இல்லாமல் பசும்பால் தயாரிக்கப் போகிறார்கள்!

பசும்பால் ஒரு பூரண திரவ உணவு( complete liquid food) என்று சொல்லப்படுகிறது. ஒரு பூரண உணவில் இருக்கக் கூடிய புரதம், அயடின், வைட்டமின் A, D, B2, மற்றும் B12, zinc, calcium என்ற முக்கியமான nutrients - ஊட்டச்சத்துக்கள் பாலில் இருக்கின்றன.

cow_milk.jpg
பால் என்றால் பொதுவாக பசுவின் பாலை மட்டுமே நாம் சொல்லும் காலம் ஒன்றிருந்தது. ஆட்டுப்பால் பல நாடுகளில் சிறிதளவில் கிடைத்தாலும் வர்த்தக ரீதியாக மிகப்பரவலாக சந்தைப்படுத்தப்படும் நிலைமையோ அல்லது எல்லோராலும் விரும்பி வாங்கப்படும் நிலைமையோ இல்லை. ஆனால் பசுப்பாலுக்கு மாற்றாக soya milk, almond milk, oat milk, rice milk, cashew milk, macadamia milk, coconut milk என்று பல plant based -தாவரங்களில் இருந்து பெறப்படும் பால் வகைகள் இப்போது சந்தையில் நிறையவே இருக்கின்றன. Health reasons என்ற நலம் சார்ந்த பல காரணங்களுக்காகப் பலர் இப்போது இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் பசும்பாலுக்கான தேவையும் சந்தை வாய்ப்பும் பெரிதளவில் மாறுபடவில்லை. இந்த சந்தைப்பங்கைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பசும்பால் உற்பத்தியளர்கள் lite milk, skim milk, lactose free milk, A2 milk என்று பல பால் வகைகளைச் சந்தைப்படுத்துகிறார்கள்.

இயற்கையாக பசுவிலிருந்து பெறப்படும் பாலுக்கு மாற்றாக செயற்கைமுறையில் பாலைத் தயாரிக்கவேண்டிய நிலைமைகள் இப்போது உருவாகி வருகின்றன. ஆகவே செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பால் நமது நாளாந்த உணவின் ஒரு அங்கமாக மாறும் நாள் வெகு தொலைவிலில்லை என்று சொல்லப்படுகிறது.
milk
Milk Source: AAP
ஏன் பசும்பாலைச் செயற்கையாகத் தயாரிக்கவேண்டும் என்ற கேள்வி பிறக்கிறதல்லவா?

பொதுவாகவே மிருகங்களில் இருந்து பெறப்படும் உணவுப்பொருட்களுக்கு மாற்றாகச் ‘செயற்கைப் புரதம்’, ‘செயற்கை மாமிசம்’ என்று இப்போது பரவலாக சந்தைப்படுத்தப்படுவதை நாம் அறிவோம். அதே விதமாக பாலைப் பொறுத்த அளவிலும் நாம் விலங்குகளை நம்பியிருக்கத்தேவையில்லை என்ற சித்தாந்தம் இப்போது வலிமை பெற்று வருகிறது.

பசு போன்ற விலங்குகளை வளர்ப்பதில் மற்றும் பராமரிப்பதில் பூமியிலுள்ள resources-வளங்கள் என்ற நிலம், நீர், தாவர உணவு, மருந்துவகைகள் என்பவை பெருமளவில் செலவிடப்படுகின்றன. எனவே இந்த மாதிரி எவ்வித வளங்களையும் முதலீடு செய்யாமல் அதே வேளையில் பாலின் சத்து, சுவை, மணம், குணம், நிறம் எதுவுமே மாறுபடாத வண்ணமாக குறைவான செலவில் செயற்கையாகப் பாலைத் தயாரிக்கமுடியும் என்ற நிலையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

உலகம் நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அதீத முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. Green house gases என்ற methane ஐ வெளியேற்றுவதில் பால் தரும் பசு போன்ற விலங்குகள் பிரதான பங்குவகிக்கின்றன. இவற்றை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் வேளாண்மை தொடர்பாக உருவாகும் green house gases களில் 70 சதவீதம் பால் தரும் விலங்குகளினாலேயே உருவாவதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
Almost half of Australia’s annual methane emissions come from agriculture.
Almost half of Australia’s annual methane emissions come from agriculture. Source: SBS / Lucy Murray/SBS News
Animal welfare -விலங்குகளின் நலன் தொடர்பான கரிசனைகள் இப்போது அதிகரித்துவருகின்றன. பண்ணைகளில் விலங்குகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை; அவற்றுக்குப் போதுமான space- நடமாடும் இடம் இல்லை;அவை கொடுமைப் படுத்தப்படுகின்றன; சுதந்திரமாக வெளியில் திரிய முடியாத காரணத்தால் அவை stress - மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகின்றன; கன்றுகள் போதுமான தாய்ப்பால் பெறுவதில்லை; தாயிடமிருந்து அகாலத்தில், பிறந்த 24 மணித்தியாலங்களில் கன்றுகள் பிரிக்கப்படுகின்றன; மாடுகளின் கொம்புகள் மனிதரது பாதுகாப்பிற்காக வெட்டப்படுகின்றன என்று பலவித குற்றச்சாட்டுகள் பண்ணை உரிமையாளர்கள் மீது வைக்கப்படுகின்றன. எனவே உலகில் ஆடு மாடுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கும் செயற்கை பால் தீர்வாக அமையும்.

விலங்குப் பொருட்களை உணவுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் - vegans களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, விலங்குகளின் பாலை அருந்துவோரின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டுவருகிறது. Plant based milk என்ற தாவரங்கள் மூலமாகப் பெறப்படும் பால் வகைகளும் இதற்கான காரணங்களுள் ஒன்று. அமெரிக்கா போன்ற நாடுகளில் பல dairy farms பால் பண்ணைகள் இலாபகரமாக இயங்கமுடியாத நிலையில் மூடப்பட்டுவருகின்றன. உற்பத்தி செலவும் தொடர்ந்து அதிகரித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு செயற்கை முறையில் பாலைத் தயாரிக்கும் போது, சிலருக்கு ஒவ்வாத lactose மற்றும் நலம் சார்ந்த காரணங்களுக்காகப் பலர் விரும்பும் lite, fat reduced, sugar reduced, என்பன போன்ற variations களையும் குறைந்த செலவில் தயாரிக்கமுடியம் என்பதும், மேலும் தேவையான ஊட்டச்சத்துக்களை தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனவே செயற்கைப் பால் தயாரிப்பு முயற்சி முனைப்படைந்துள்ளது.

செயற்கைப்பால் தயாரிக்க எந்த விலங்கும் அல்லது விலங்குப்பொருளும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பசும்பாலின் bio chemical makeup என்ற இயற்கையாக அமைந்துள்ள வேதியல் பண்புகள் யாவும் செயற்கைப்பாலிலும் இருக்கவேண்டியது பெரிய சவாலாகும்.
இதன் காரணமாக precision fermentation என்ற bio technology- உயிரியல் தொழில்நுட்பம் மூலமாக செயற்கைப்பால் செறிவுபடுத்தப்படுகிறது. இதன் தயாரிப்பில் தண்ணீர், pulverised detergent, sodium hydroxide, vegetable oils, urea, artificial sweeteners என்ற செயற்கைச் சர்க்கரை என்பன பயன் படுத்தப்படுகின்றன. Colouring agents என்ற நிறமூட்டிகள், preservatives என்ற பதப்படுத்திகள் மற்றும் இன்னோரன்ன வேதியல் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
Milk.
Milk. Source: Pixabay
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பால் இப்போது சந்தையில் இப்போதே உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் Perfect Day என்ற நிறுவனம் செயற்கைப்பால், பால்புரதம், மற்றும் இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் ice cream, பால் பவுடர் என்பற்றைத்தயாரித்துச் சந்தைப்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவிலும் Eden Brew என்ற நிறுவனம் விக்டோரியா மாநிலத்திலுள்ள Werribee என்ற இடத்தில் அமைந்துள்ள தமது ஆலையில் synthetic milk என்ற செயற்கைப்பாலைத் தயாரிக்கிறது.

இந்த நிறுவனங்கள் காலநிலைமாற்றம் மற்றும் கால்நடைகளால் அதிகரித்துவரும் methane வாயு என்பவை பற்றி கரிசனையுள்ளவர்களைக் குறிவைத்து இவற்றைச் சந்தைப்படுத்துகிறது. Eden Brew நிறுவனம் பயன்படுத்தும் தொழில் நுட்பம் CSIRO வால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ‘Yeast ஐப்பயன்படுத்தி precision fermentation என்ற முறையில் பசும்பாலில் இருக்கும் அதே புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. Minerals என்ற கனிமங்கள், செயற்கைச் சர்க்கரை, எண்ணெய்க் கொழுப்பு என்பன இந்தப் புரதங்களுடன் சேர்க்கப்பட்டு பசும் பாலுக்கு மாற்றாக இது உருவாகிறது’ என்று CSIRO வின் குறிப்பொன்று சொல்கிறது.

All G Foods என்ற நிறுவனம் 25 மில்லியன் டாலர்கள் செலவில் synthetic milk ஆலை ஒன்றை நிறுவிவருகிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் synthetic milk இன் விலை பசும் பாலின் விலையைவிடக் குறைவாக இருக்கும் என்று அது எதிர்பார்க்கிறது. இந்த நிலை உருவானால் அது பாரம்பரிய பண்ணையாளர்களுக்கு பெருஞ்சவாலாக அமையும் என்பது மட்டுமல்ல விலங்குகள் சார்ந்த விவசாயம், பண்ணைத்தொழில் என்பவற்றிலிருந்து மனித குலம் விலகி முற்றிலும் வித்தியாசமான உணவு முறைக்கு அது அடியெடுத்து வைக்கும்.
Milk
Milk Source: Pixabay
இந்த நிலை வெகு விரைவில் உருவாகும் என்று கணிக்கப்படுவதால் பாரம்பரிய பண்ணை உற்பத்தியாளர்கள் செயற்கைப்பால் தயாரிப்பவர்களுடன் கை கோர்க்கத் தொடங்கியுள்ளனர். Australian Dairy cooperative ஆன Norco, Eden Brew வுடன் இணைந்துள்ளது. New Zealand இன் Dairy Cooperative ஆன Fonterra செயற்கைப் பால் தயாரிப்பிலுள்ள ஒரு நிறுவனத்துடன் இணைந்து fermentation derived protein with dairy like products ஐ வர்த்தக அடிப்படையில் தயாரிக்க முனைந்துள்ளது.

செயற்கைப் பால் உற்பத்தி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. இது உடனடியாக பாரம்பரிய பால் பண்ணைத் தொழிலைப் பாதிக்கப் போவதில்லை. பால் பண்ணையாளர்களும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்துவதோடு, விலங்குகள் மூலமாகப் பெறும் பாலின் அளவை அதிகரிக்கவும், விலங்குகளின் நலன், பராமரிப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்துவதில் நாட்டம் கொண்டு வருவதோடு, தீவனங்களில் செய்யக்கூடிய மாற்றங்கள் காரணமாக விலங்குகள் வெளியேற்றும் methane வாயுவின் அளவைக் குறைப்பது தொடர்பாகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

செயற்கைமுறையில் பால் தயாரிக்கப்படுவது, மற்றும் பசும்பாலுக்கு ஒரு மாற்று இருப்பது , அதற்கென ஒரு நுகர்வோர் கூட்டம் தயாராக இருப்பது என்பன பண்ணைப்பாலுக்கான சந்தைப் பங்கில் சிறிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றபோதும் இதனால் மிகச்சிறிய பால் பண்ணையாளர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள். செயற்கைப்பால் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்து கணிசமான சந்தைப்பங்கை அது பெற பெருந்தொகை மூலதனம் மற்றும் ஆராய்ச்சி என்பன தேவை.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By R.Sathiyanathan
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand