SKIP TO MAIN CONTENT

தேங்கிக்கிடக்கும் 63576 வதிவிட உரிமை-தஞ்சக்கோரிக்கை மேன்முறையீட்டு விண்ணப்பங்கள்

Demonstrators march through Sydney's CBD during a rally calling for refugee rights in Sydney, Saturday, September 14, 2019.
Demonstrators march through Sydney's CBD during a rally calling for refugee rights in Sydney, Saturday, September 14, 2019. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் உட்பட சுமார் 63 ஆயிரத்து 576 பேரின் மேன் முறையீட்டு விண்ணப்பங்கள் அரசு நிர்வாக மேன்முறையீட்டு ஆணையகத்தின் (Administrative Appeals Tribunal) முன்பாக தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர வதிவிட உரிமைக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட மேன்முறையீடுகளே இவ்வாறு Administrative Appeals Tribunal முன்பாக தேங்கிக்கிடக்கின்றன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பகுதி தஞ்சக்கோரிக்கையாளர்களுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5858 மலேசியர்கள் 1561 சீனர்கள் 465 வியட்நாமியர்கள் 227 இந்தியர்கள் 178 பாகிஸ்தானியர்கள் அடங்குகின்றனர் என்றும் தரவுகள் கூறுகின்றன.

சுமார் 105 முழுநேர உத்தியோகத்தர்கள் அடங்கலாக 353 முடிவெடுக்கவல்ல அதிகாரிகளுடன் இயங்கும் Administrative Appeals Tribunal கடந்த நிதியாண்டில்  விசாரித்த 60 ஆயிரத்து 595 மேன்முறையீட்டு விண்ணப்பங்களில் 44 ஆயிரத்து 413 விண்ணப்பங்களுக்கு முடிவுகளை அறிவுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now