ATO-வரித்திணைக்களத்தை ஏமாற்றுபவர்கள் தொடர்பாக நாளொன்றுக்கு 140 பேர் தம்மைத் தொடர்புகொண்டு துப்புக்கொடுப்பதாக வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்களது நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தங்களுக்கு வரியில்லாமல் பணம் தருபவர்கள் தொடர்பாக அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களே இவ்வாறு தங்கள் முதலாளிகளை காட்டிக்கொடுக்கிறார்கள் என்று வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மாத்திரம் இவ்வாறான சுமார் 5586 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ள வரித்திணைக்களம், ஆஸ்திரேலியாவில் வரித்திணைக்களத்துக்கு கணக்கு காண்பிக்காமல் வருடமொன்றுக்கு 50 பில்லியன் டொலர் பணம் சட்டவிரோதமாக கைமாறப்படுகின்றது என்ற திடுக்கிடும் தகவலையும் கூறியிருக்கிறது.
வரி செலுத்தமால் சம்பளம் கொடுக்கும் வேலையிட உரிமையாளர்கள் தொடர்பாக மாத்திரமல்லாமல், superannuation செலுத்தாதவர்கள் தொடர்பான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கப்பெறுவதாக வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
Share
