SKIP TO MAIN CONTENT

துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ள இலங்கை இளைஞரை தேடிவரும் ஆஸி. பொலீஸ்!

WA Police
Source: WA Police

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் பேர்த் நகரில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இலங்கை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை பொலீஸார் தேடி வருகிறார்கள்.

பேர்த் மாநகரின் Langford பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பொலீஸார் - 28 வயதான Hari Ganeshan என்ற பெயருடைய குறிப்பிட்ட இளைஞர் 179 சென்றி மீற்றர் உயரமும் பருமனான உடலும் கொண்டவர் என்றும், தாக்குதல் நடத்திய ஆயுதத்துடன் தப்பியோடியுள்ளார் என்றும் நம்பப்படுவதால் அவரை அணுகுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டவரும் தாக்குதலுக்குள்ளானவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்றும் சம்பவம் இடம்பெற்ற அன்று என்ன நடந்தது என்பது குறித்து தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவரிடம் தாங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் இலங்கையிலிருந்து இரண்டு வயதில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தவர் என்று தெரியவருகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now