திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற Emirates விமானம் Crash-Landing முறையில் தரையிறக்கப்பட்டு பயணிகளை அவசரமாக வெளியேறுமாறு பணிக்கப்பட்ட போது பல பயணிகள் தமது பயணப்பைகளை எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டதாகவும் இது மிகவும் தவறான செயல் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பைகளை வைத்துவிட்டு வெளியே குதியுங்கள் என்று விமானப்பணியாளர்கள் சத்தமிடுமளவுக்கு பலர் தமது பைகளிலேயே கவனம் செலுத்தியதாகவும் இப்படியான அவசர நிலைமைகளில் உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்கே அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகின்றது.
300 பேருடன் சென்ற Boeing 777 ரக விமானத்திலிருந்து பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட அடுத்த நிமிடங்களில் விமானத்தின் ஒரு பகுதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The common sense rule of leaving baggage behind during an emergency evacuation is "one of the greatest dilemmas facing cabin crew and airlines" according to one Australian expert.
Footage taken of the emergency evacuation of the Emirates plane which crash-landed and caught fire in Dubai shows dozens of passengers holding up the process by taking their bags out of the overhead luggage compartments.
