தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Australia Post நிறுவனம் சிறப்பு முத்திரைகள்/தபால் தலைகளை வெளியிடுகின்றது.
பல்லினகலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் வாழும் ஆஸ்திரேலியாவில், தீபாவளி பண்டிகையை அடையாளப்படுத்தும் முத்திரைகளை வெளியிடுவதில் தாம் பெருமையடைவதாக Australia Post-இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு டொலர் Red heart முத்திரையுடன், கைகளில் தீபமேந்தியவாறு காணப்படும் சிறப்பு முத்திரைகள் எதிர்வரும் அக்டோபர் 17ம் திகதி முதல் வெளியிடப்படுகின்றன.
இப்புதிய முத்திரைகளை இணையம் மற்றும் தபால் ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட சில தபால் நிலையங்களிலோ பெற்றுக்கொள்ள முடியும்.