கடந்த வாரம் கொக்கோஸ் தீவுக்கருகில் வைத்து இடைமறிக்கப்பட்ட படகிலிருந்த 12 புகலிடக் கோரிக்கையாளர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்த நிலையில்,அவர்கள் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் சிங்கள இனத்தவர்கள் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்படுகின்ற போதிலும் இவர்கள் நல்ல முறையிலேயே நடத்தப்படுவதாக இலங்கை குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஏபிஸி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அவர்கள் எங்கே தற்போது இருக்கிறார்கள் என்பது தமக்குத் தெரியாது என இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் லக்ஸ்மா சொய்ஸா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்ற கேள்விக்கு “இருக்கலாம்” என அவர் பதிலளித்துள்ளார்.

12 பேரும் சிங்கள இனத்தவர்கள் என்பதால் பொருளாதார ஆதாயங்களுக்காகவே இவர்கள் படகுப் பயணம் மேற்கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் நிர்வாகி ஜெஹான் பெரேரா கூறியுள்ளார்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இவ்வாறு திருப்பி அனுபப்படுகின்ற போது மேற்கொள்ளப்படக்கூடிய துன்புறுத்தல்களுக்கு யாரும் விதிவிலக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை புகலிடம் கோரி வருபவர்களை இவ்வாறு திருப்பி அனுப்புவதன் மூலம் ஆஸ்திரேலியா சர்வதேச நியமங்களை மீறுவதாக, இலங்கையிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் றூகி ஃபெர்னாண்டோ குறிப்பிட்டார்.
குறித்த படகிலிருந்த 12 புகலிடக் கோரிக்கையாளர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sri Lankan's Government has confirmed 12 would-be migrants sent back to Colombo by Australia last week are currently in the hands of its Criminal Investigation Department (CID).
The country's Immigration and Emigration Department told the ABC the group Australia sent back last week are all members of the majority Sinhalese ethnicity, and insists they are all being treated properly.
Yesterday Immigration Minister Peter Dutton confirmed recent reports that a boat carrying 12 Sri Lankans had reached the Cocos Islands in the Indian Ocean, north-west of the Australian mainland.
Now, Sri Lanka's Immigration Department has confirmed its officers have given the group over to the country's Criminal Investigation Department.
Immigration Department spokesman Lakshma Zoysa said the group was being investigated to determine "how they went from Sri Lanka".
"They are involved in criminal activities, yeah, that's an immigration crime," he said.
The group is also being questioned he said, to try and glean information about who organised the trip.
Mr Zoysa said he does not know where the group is currently.
Asked if they were being detained, he replied "maybe".
However, he said that the returnees were being treated properly.
"We are not torture them, our CID officers ... handle them [in a] legal manner," Mr Zoysa said.
Dr Jehan Perera, executive director of the National Peace Council for Sri Lanka, said being Sinhalese meant it was less likely the group would have been found to be genuine refugees.
But Dr Perera said regardless of the group's motivation, their ethnicity was no guarantee they would not face abuse by authorities having been sent back to Sri Lanka.
"I don't think that the use of torture is limited to Tamils," he said.
Another Sri Lankan human rights activist, Ruki Fernando, said it was "likely" that Australia had not met legal obligations by returning the group.
"Given that torture is widespread in Sri Lanka, it's likely that Australia may be in breach of international obligations," he said.
