SKIP TO MAIN CONTENT

தேர்தல் முடிவுகள் 2019: 'ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள மக்கள் நீதி மய்யம்'

Kamal
Source: Hindustan times

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

கட்சி தொடங்கி ஒரு வருடத்திற்குள் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ள வாக்கு வெற்றி பல தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது..

தனித்துப்போட்டியிட்ட இடங்களில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளமையானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர் ஆகிய 11 மக்களவை தொகுதிகளிலும் புதுவை யூனியன் பிரதேச மக்களவை தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

அ.தி.மு.க கூட்டணி வைத்துக்கொண்ட விஜயகாந்தின் தேமுதிக உட்பட புதிதாக தேர்தலிம் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி மற்றும் டி.டி.வி. தினகரன் அணி ஆகியவற்றைக்கூட பின்னுக்கு தள்ளிக்கொண்டு முன்னிலையை பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி அந்தக்கட்சியின் எதிர்காலம் குறித்தும் கமல்ஹாசனின் அரசியல் பாதை குறித்தும் பல தரப்பிலும் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கச்செய்திருக்கின்றன.

திமுக- அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியபோது அவர்கள் ஒரு வாக்கு கூட வாங்கமாட்டார்கள் என்று பலர் எதிர்பார்த்தநிலையில், திமுக- அதிமுக கட்சிகளின் வாக்குகளை பெரும்பாலும் கமலின் கட்சியே பிரித்தது என்று சொல்லப்படுகிறது.

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியே நிகழ்த்த இயலாத இந்த சாதனையை களம் கண்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்த்தியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். .


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now