டார்வினில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஆகக்குறைந்தது நால்வர் கொல்லப்பட்ட அதேநேரம் மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர்.
டார்வின் நகரின் மையப்பகுதியில் இன்று பிற்பகல் 6 மணிமுதல் இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தாக்குதல்களை மேற்கொண்ட ஆயுததாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
45 வயதான குறித்த நபர் சமீபத்தில் சிறைச்சாலையிலிருந்து பரோலில் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக McMinn Street-இல் அமைந்துள்ள Palms Motel–க்குச் சென்ற ஆயுததாரி அலெக்ஸ் என்ற நபரைத் தேடியதாகவும் பின்னர் அங்கிருந்தவர்களைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து டார்வின் நகரின் Gardens Hill Crescent, Buff Club ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் தனிநபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் இது ஒரு தீவரவாத தாக்குதலாக கருதப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share
