SKIP TO MAIN CONTENT

தேவையற்ற மருந்துகளை என்ன செய்கின்றீர்கள்?

expired medicine
expired medicine Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

நமது வீட்டில் காலாவதியான அல்லது தேவையற்ற மருந்துகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கக்கூடும். இவற்றை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தாமல் விடுவதால், பல பின்விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகின்றது.

குறிப்பாக மருந்துப்பொருட்களிலுள்ள செயற்றிறன்மிக்க மூலப்பொருட்கள், குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பின்னர் காலாவதியாகிவிடும் என்பதால், அவற்றை வீடுகளில் தொடர்ந்து  வைத்திருக்கும் போது, அதைத் தவறுதலாக வேறு யாரேனும் சாப்பிடக்கூடிய ஆபத்து உள்ளது.

எனவே தேவையற்ற மற்றும் காலாவதியான மருந்துப்பொருட்களை குப்பை, கழிவறை மற்றும் சமையலறை Sink-ற்குள் வீசாமல் அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்தவேண்டும்.

Prescription medicines, over-the-counter medicines, herbal or complementary supplements, gels, liquids ,creams  என எதுவாக இருந்தாலும், தேவையற்ற மற்றும் காலாவதியான மருந்துப்பொருட்கள் அனைத்தையும், ஒரு பையினுள் போட்டுக் கட்டி, உங்கள் அருகிலுள்ள pharmacy-மருந்தகங்களில் அவற்றை ஒப்படைப்பதே சரியான அப்புறப்படுத்தல் முறையாகும். மருந்தகங்கள் அவற்றைச் சரியான இடத்தில் சேர்த்துவிடுவார்கள்.

இதேவேளை உங்கள் வீடுகளில் மருந்துப்பொருட்களை வைக்கும் போது கீழ்க்காணும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

1.    எப்போதும் சூரியஒளி படாத உலர்ந்த குளிர்மையான இடத்தில் அவற்றை வைக்க வேண்டும். காற்றுப்புகாத பெட்டி- airtight container-இல் வைப்பது மிகவும் நல்லது.

2.    குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள்.

3.    குளியலறையிலுள்ள அலமாரியில் வைப்பது நல்லதல்ல. அதேபோல் சமையலறையில் அடுப்பு மற்றும் oven-க்கு அருகில் வைப்பதையும், குளிர்சாதனப்பெட்டியின்மேல் வைப்பதையும் தவிருங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now