தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டுகள் மன்னராக ஆட்சி நடத்திய அல்லது உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற சாதனை கொண்ட தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.
கடந்த 1946ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அவருக்குப் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகங்கள், இதயம் போன்ற உறுப்புக்கள் மிகவும் பலவீனமாக இருந்து வந்தன. இந்த நிலையில் அவரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
தாய்லாந்து மக்கள் பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு, மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். அவர் இறந்த செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாது மன்னராட்சி கொண்ட நாடு அல்ல என்றாலும், மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ் பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதால், அவர் மீது, தாய்லாந்து மக்கள், மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர். அவரது, ஆட்சிக் காலத்தில், தாய்லாந்து பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்தது.
மன்னர் பூமிபால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்தவர் , ஜூன் 9 1946-ல் அரியணையில் அமர்ந்தவர். ராணுவம் தற்போது ஆட்சி செய்து வரும் தாய்லாந்தில் மன்னரின் மரணம் ஒரு ஸ்திரமற்ற நிலைக்கு வழிவகுக்கக்கூடும் என்று அச்சங்கள் நிலவுகின்றன.
பட்டத்து இளவரசர் மஹா வஜிரலோங்கோன் புதிய மன்னராகிறார் என்று தாய்லந்துப் பிரதமர் ப்ரயூத் சான் ஒச்சா கூறினார். காலமான மன்னர் பூமிபோனுக்கு நாடு ஓராண்டு காலத் துக்கம் அனுஷ்டிக்கும் என்றும் ஒச்சா கூறினார்.
