இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என்றும், இந்த மொழிகளில் தமிழ் மொழி மிகவும் பழமையானது என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தோ-ஆரிய வருகைக்கு முன்பே திராவிடம் தெற்காசியாவில் இருந்தது என்பதும் இந்த ஆய்வு மூலம் மேலும் ஒருமுறை நிரூபிக்கபட்டுள்ளது.
திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும் (Max Planck Institute for the Science of Human History in Germany), டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் (Wildlife Institute of India) இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பினவருமாறு தெரிவிக்கிறது:திராவிட மொழிகள் இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படுகிறது; இதை தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் உள்ள மக்களே அதிகம்பயன்படுத்துகின்றனர். திராவிட மொழி குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியமொழிகள் உள்ளன. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் மிகவும் தொன்மைவாய்ந்தது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. ஆனால், தமிழ் தன்னுடைய பழைமையை இப்போதும் தக்கவைத்துக்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

The Dravidian language family, which comprises 80 variations spoken by 220 million people across southern and central India and other parts of south Asia, is 4,500 years old, according to an international study that emphasizes the influence it has had on other language groups through Eurasian prehistory. South Asia is home to at least 600 languages that belong to four large language families: Dravidian, Indo-European, Austo-Asiatic and Sino-Tibetan.
Sanskrit and Tamil are among the world’s oldest classical languages, but unlike Sanskrit, the continuity between Tamil’s classical and modern forms is documented in inscriptions, poems, secular and religious texts, and songs, according to a team of international researchers that used data collected first-hand from native speakers representing all previously reported Dravidian subgroups. The Dravidian language family’s four largest languages — Kannada, Malayalam, Tamil and Telugu — have literary traditions spanning centuries, of which Tamil reaches back the furthest, researchers said.
