SKIP TO MAIN CONTENT

தமிழ் மொழியில் இ-மெயில் முகவரி!

Microsoft
Source: Raj

3 min read

Published

By Raymond Selvaraj


Skip to article content

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான Microsoft,  இந்தியாவின் 15 மொழிகளில் இமெயில் முகவரி உள்பட பல்வேறு சேவைகளை வழங்கபோவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 15 உள்ளூர் மொழிகளில், E-mail இ-மெயில் முகவரி, Office 365 - ஆபிஸ் 365,  Outlook 2016 - அவுட்லுக் 2016, Outlook.com அவுட்லுக் டாட் காம்,  Online ஆன்லைன் மற்றும் Offline ஆப்லைன் பரிமாற்றங்களுக்கு உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தலாம் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி இனி  மக்கள் இமெயில் கணக்கில் தமிழ் மொழியில் தங்களுக்கான கணக்கைத் தொடங்கலாம்.

தங்களது சொந்த கணினியை பயன்படுத்தும் பயனர்களில் இ-மெயில் முகவரிக்கு வரும் மெயில்கள், அனுப்பும் மெயில்கள், -மெயில் முகவரிகளை உள்ளூர் மொழியில் உருவாக்கலாம். அவுட்லுக் டாட் காம் கூடுதலாக தனது அவுட்லுக் செயலி மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்தச் சேவையை அளிக்கும்.

மக்கள் தங்களின் தாய்மொழியில் தொழில்நுட்பங்களை முதன்முதலில் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை, அதனால் மக்கள் பயன்படுத்தும் மொழியில் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறோம் என்றும் உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பங்களை வழங்கும் சூழல் இதன் மூலம் உருவாகும் என்றும் Microsoft கூறியுள்ளது.

கடந்த மாதத்தில் டிஎன்என் என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஹிந்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட மொழிகளை மாற்றும் சேவையை மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MIcrosoft
Source: Raj

In a major and important announcement that should cheer a lot of Indian computer users, Microsoft has introduced support for 15 Indian languages within its frequently used software. This means email addresses can be stored on Microsoft Outlook in the local languages and used for sending out mails from their personal computers.

The programs where these languages can now work are Office 365, Outlook 2016, Outlook.com, Exchange Online and Exchange Online Protection (EOP). Microsoft used the occasion of the International Mother Language Day to make this announcement.

This practically makes seamless sending, receiving mails to and from local language e-mail addresses via Outlook client on PCs, Outlook.com etc., a possibility. Apart from this, Outlook apps for Android and IOS will also be enabled to permit the use of these languages to communicate.

There is already, an initiative, Email Address Internationalisation (EAI) and the present move by Microsoft is a step towards supporting this initiative. In this round, the local Indian languages chosen are the ones that support the international coding standard, Unicode. Microsoft may keep adding more languages going ahead.

Already, Microsoft has integrated artificial intelligence technology and Deep Neuro Networks (DNN) with its systems to enable better real-time translation of 3 key Indian languages, Hindi, Bengali and Tamil. With this, the users can immensely benefit when they are using the Microsoft Edge browser to search for information on sites like Bing search, Bing Translator or while using any Microsoft’s programs like Word, Excel, PowerPoint, Outlook and Skype.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now