ட்விட்டர் சமூக வலைத்தள பாவனையாளர்கள் இனிமேல் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளில் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் பெரிய மாற்றமாக இது கருதப்படுகிறது.
இதன்படி மொபைல் ட்விட்டர் தளங்களில் இருப்பதை போன்று கணினிகளுக்கான வலைத்தளமான twitter.com-இல் தமிழ், உருது, பெங்காலி, இந்தி, குஜராத்தி, மராத்தி, மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் பாவனையாளர்கள் இப்புதிய அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ளும்வகையில் தளத்தின் இடதுபுறத்தில் explore, lists மற்றும் bookmarks போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமல்லாமல் பல்வேறுமொழிகளில் ட்விட்டர் தளத்தை இயக்குவதற்கு ஏற்றவகையில் மொழிமாற்றம் செய்துகொள்வதற்கான சேவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
