SKIP TO MAIN CONTENT

தம்பதி பிரிந்துவிடுவார்கள் என்பதை துவக்கத்திலேயே கண்டுபிடிக்கலாம்!?

“நெருக்கமா, நல்லாதானே இருந்தாங்க, பிரிஞ்சிடாங்களா?” என்று ஆச்சரியப்படும் வகையில் திருமணமான அல்லது உறவில் இருக்கும் தம்பதிகள் பிரிந்துவிடுவதை நாம் பார்த்திருப்போம். திருமணமாகும் அல்லது புதிய உறவைத் துவங்கும் தம்பதிகள் பிரிந்துவிடுவார்களா இல்லையா என்று வெளியில் இருப்பவர்கள் துவக்கத்திலேயே கணித்துவிடலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு.

Separating couples
Source: Tumisu - Pixabay

1 min read

Published

By Raymond Selvaraj

Source: The Independent


Skip to article content

Journal of Personality and Social Psychology எனும் உளவியல் புத்தகத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையின் முடிவில் எப்படியான உறவு முறிவில் முடியும் என்று திருமணங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களும்  தரப்பட்டுள்ளன. 168 தம்பதியனர்களுடன் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

உறவு ஆரம்பித்த துவக்கத்தில் அல்லது மணமான புதிதில் பிற சாதாரண தம்பதிகள் போலன்றி, அளவுக்கு அதிகமாக காதலும், பாசமும், நேசமும் பொங்கிவழிய வாழக்கையைத் துவங்கும் தம்பதிகள் சில ஆண்டுகளில் விவாகரத்து அல்லது மணமுறிவு அல்லது உறவு முறிவை சந்திக்கின்றனர் என்று அந்த ஆய்வு  ஆச்சரியபடுத்தும் முடிவை தெரிவிக்கிறது.         

துவக்கத்தில் காதலும், பாசமும், நேசமும் அதிகமாக இருக்கும்போது கணவன் குறித்து அல்லது மனைவி குறித்த எதிர்பார்ப்பு அதிகமிருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த எதிர்பார்ப்பின்படி பிறரால் வாழமுடிவதில்லை அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை. எனவே எதிர்பார்ப்பை சுமக்கும் கணவனோ அல்லது மனைவியோ விரக்தியடைந்து சுமார் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்குள்  விவாகரத்து அல்லது மணமுறிவு அல்லது உறவு முறிவை சந்திக்கின்றனர் என்று அந்த ஆய்வு  தெரிவிக்கிறது.         

அதுபோன்றே முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போன்று, துவக்கத்திலேயே புரிதல் இன்றி துவங்கும் உறவு அல்லது துவக்கத்திலேயே தம்பதியினர் மத்தியில் எழும் சிறு சிறு சண்டை சில ஆண்டுகளில் விவாகரத்து அல்லது மணமுறிவு அல்லது உறவு முறிவை நோக்கி நகர்த்துகிறது என்கிறது  Journal of Personality and Social Psychology எனும் உளவியல் புத்தகம் வெளியிட்டிருக்கும் ஆய்வு.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now