இளவேனில் வாலறிவன் முதலிடத்தைப் பிடிக்க, பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் இரண்டாமிடத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் மூன்றாமிடத்தையும் வென்றுள்ளனர்.
20 வயதாகும் இளவேனில் வாலறிவன் தற்போது குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். முதன்முறையாக இளையோருக்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடந்த ஆண்டு பங்கேற்ற இவர், அந்தப் போட்டியில் தங்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.