மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!

மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Ramanan

Source: Ramanan-Facebook

மெல்பன் Hampton Park-ஐச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற இளைஞர் கடந்த 14ம் திகதி இரவு தூக்கத்திலேயே மரணமடைந்ததாகவும், இவரது மரணத்திற்கான பின்னணி தொடர்பில் உறுதியாக எதுவும் தெரியாது எனவும் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதாகவும் திரு.அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டினார்.

இதேவேளை ரமணனின் இறுதிநிகழ்வுகளை நடத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளதாகவும் திரு.அரன் மயில்வாகனம் கூறினார்.

If you are experiencing a personal crisis and need someone to talk to, please call: Lifeline on 13 11 14 or Beyond Blue on 1300 22 4636

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

Presented by Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand