SKIP TO MAIN CONTENT

உலக விருது பெறுகிறார் இலங்கைத் தமிழ் பெண்

ஆசியாவின் நோபல் பரிசான ராமன் மாக்ச்சே விருதுகளுக்கான இந்த வருட வெற்றியாளர்களில் ஆறு பேரில் ஒருவராக, 82 வயதான தமிழ் ஆசிரியர் கெத்சீ சண்முகம் (Gethsie Shanmugam) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Gethsie Shanmugam
Gethsie Shanmugam Source: Sunday Times

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

கெத்சீ சண்முகம் மற்றும் மேலும் ஐந்து விருது பெறுநர்கள் பெயர்கள் நேற்றிரவு பெயரிடப்பட்டது. இந்த விருதுகள், ஆகஸ்ட் 31ம் தேதி மணிலா நகரில் அவர்களுக்கு வழங்கப்படும்.

ஒரு ஆசிரியரான கெத்சீ சண்முகம், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கும், மோதல் வலயங்களில் குண்டு வெடிப்புகளினாலும், அச்சுறுத்தல்ககளினாலும் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிவருகிறார்.

1957ம் ஆண்டு விமான விபத்தில் இறந்த பிலிப்பைன் ஜனாதிபதி ரமோன் மக்ஸாசே பெயரில் வழங்கப்படும் விருதுகள் ஆசியாவின் நோபல் பரிசு எனக் கருதப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now