SKIP TO MAIN CONTENT

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

web

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். இவர், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரை உள்ளிட்டவை மிகவும் பிரபலம். பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருதுபெற்றார்.

மறைந்த பாலகுமாரனுக்கு மனைவி கமலா, துணைவி சாந்தா, மகள் கவுரி, மகன் சூர்யா ஆகியோர் உள்ளனர். 

இவர் கமல்ஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்ஷா, டைரக்டர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உட்பட சுமார் 23 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜுடன் இணைந்து சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ’இது நம்ம ஆளு’ படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now