French Open, Birmingham Classic என தொடர் வெற்றிகளை தனதாக்கிக்கொண்ட ஆஸ்திரேலிய பூர்வீக பின்னணி கொண்ட டென்னிஸ் வீராங்கனை Ashleigh Barty பெண்கள் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் உலகளவில் முதலிடத்தை பிடித்துக்கொள்ளும் சாதனை 43 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்திருக்கிறது.
2014 ஆம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டிலிருந்து விலகி மகளிர் கிரிக்கெட் விளையாட்டின் மீது விருப்பங்கொண்டு சென்ற Ashleigh Barty, 2016 ஆம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் இணைந்துகொண்டார்.உள்ளுர் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி தேசியளவிலும் பல வெற்றிகளை குவித்தார்.
Ashleigh Barty இந்த மாத தொடக்கத்தில் French Open- இல் ஆஸ்திரேலியா சார்பில் கலந்துகொண்டது முதல் தற்போது வரை அவர் பெறும் தொடர்வெற்றிகள் அவரை உலகத் தரவரிசையில் முதலிடத்துக்கு உயர்த்தியுள்ளது.
டென்னிஸ் போட்டிகளில் உலக தரவரிசையில் முதலிடத்தை இதுவரை பெற்றுக்கொண்ட ஐந்து பேருடன் தற்போது Ashleigh Barty இணைந்துகொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக Evonne Goolagong Cawley, John Newcombe, Pat Rafter, Lleyton Hewitt ஆகியோர் உலக தரவரிசையில் முதலிடத்தை சுவீகரித்திருந்தனர்.
2003 ஆம் ஆண்டு உலக தரவரிசையில் ஆண்கள் பிரிவில் Lleyton Hewitt முதலிடம் பெற்றபின்னர் ஆஸ்திரேலிய சார்பில் யாரும் அந்த இடத்தை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share
