ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள சுமார் 75 வரையான Target மற்றும் Target Country கிளைகள் மூடப்படவுள்ளதாகவும் மேலும் சில கிளைகள் Kmart-ஆக மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதுள்ள 280 க்கும் மேற்பட்ட Target கிளைகளின் தாய்நிறுவனமான Wesfarmers, தமது எதிர்கால வர்த்தகசெயற்பாடுகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள மீளாய்வின் அடிப்படையில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்படி 10-25 வரையான Target கிளைகளும் 50 Target Country கிளைகளும் மூடப்படும் அதேநேரம் 10-40 வரையான Target கிளைகளும் 52 Target Country கிளைகளும் Kmart ஆக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக நாடுமுழுவதும் 1300 பேர் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இதேவேளை மொத்தமாக எத்தனை கிளைகள் மற்றும் எந்தெந்த கிளைகள் மூடப்படவுள்ளன என்ற உறுதியான விபரங்களை Wesfarmers நிறுவனம் வெளியிடவில்லை.
