Tasmania மாநிலத்தில் இன்று நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வந்துகொண்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி ஆளும் லிபரல் கட்சி 12 இடங்களையும், எதிர்கட்சியான லேபர் கட்சி 5 இடங்களையும், கிரீன்ஸ் கட்சி இரண்டு இடங்ககளையும் கைப்பற்றியுள்ளன.
மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே ஒரு கட்சி அறுதிப் பெரும்பானமையுடன் ஆட்சி அமைக்க இயலும். லிபரல் கட்சி ஒரு இடத்தை இன்னும் அதிகமாக வென்றுவிட்டால் லிபரல் கட்சியின் ஆட்சி நிச்சயம் தொடரும். ஆனால் ஒரு இடத்தை லிபரல் கட்சி வெல்ல முடியாமற்போனால், தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் முடிவுகளின் அடிப்படையில் Premier Peter Gutwein பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இயலாமற்போகலாம். ஆனாலும் லேபர் கட்சி கிரீன்ஸ் கட்சியுடன் இணைந்து சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் அப்படி நடப்பது கடினமே என்று ABC சய்தி அலசல் தெரிவிக்கிறது. எனவே பெரும்பாலும் லிபரல் கட்சியே ஆட்சியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Peter Gutwein இம்முறையும் ஆட்சியில் தொடர்ந்தால் Peter Gutwein மூன்றாவது தடவையாக வெற்றி பெற்று Tasmania மாநிலத்தில் ஆட்சியை தொடரும் சாதனையை ஏற்படுத்துவார்.
Premier Peter Gutwein தனது Bass எனப்படும் தொகுதியிலும், துணை Premier Jeremy Rockliff தனது Braddon தொகுதியிலும், எதிர்கட்சியான Labor கட்சியின் தலைவர் Rebecca White தனது Lyons தொகுதியிலும் வெற்றிபெற்றிருப்பதாக ABC செய்தி கணித்துள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஆளும் லிபரல் கட்சி 12 இடங்களையும், எதிர்கட்சியான லேபர் கட்சி 9 இடங்களையும் கொண்டிருந்தன. கிரீன்ஸ் கட்சி இரண்டு இடங்களையும், Sue Hickey மற்றும் Madeleine Ogilvie ஆகியோர் சுயேட்சையாக செயல்பட்டனர். எனவே ஆளும் லிபரல் கட்சி 12 இடங்களை தக்கவைத்திருப்பது வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இயலாமற்போனால் தனது தலைமையில் ஆட்சி அமையாது என்று Premier Peter Gutwein தேர்தல் நேரத்தில் கூறியிருந்தார். எனவே, ஒருவேளை லிபரல் கட்சி 13 இடங்களைப் பெறத் தவறினால் Peter Gutwein அவர்கள் Premier பதவியை ஏற்க மறுப்பாரா அல்லது தனது மனதை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
