SKIP TO MAIN CONTENT

VIC, NSW தவிர ஏனைய ஆஸ்திரேலிய மாநிலங்களுக்கு எல்லைகளை திறந்த தஸ்மேனியா!

A file photo showing passengers boarding  a Virgin Australia plane at Hobart International  Airport, Tasmania.
A file photo showing passengers boarding a Virgin Australia plane at Hobart International Airport, Tasmania. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

விக்டோரியாவையும் நியூ சவுத் வேல்ஸையும் தவிர ஏனைய மாநிலத்தவர்கள் தனிமைப்படுத்தலின்றி பயணிப்பதற்கு வசதியாக தஸ்மேனியா தனது எல்லைகளை திறப்பதாக இன்று அறிவித்துள்ளது.

உள்நாட்டவர்கள் மாத்திரமல்லாமல் நியூஸிலாந்து நாட்டவர்களும் தனிமைப்படுத்தலின்றி தஸ்மேனியாவுக்கு பயணிக்கலாம் என்று மாநிலத்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் ஆஸ்திரேலியாவில் பரவத்தொடங்கியதும் கடந்த மார்ச் மாதம் முதன் முதலாக எல்லைகளை மூடிய மாநிலம் தஸ்மேனியா ஆகும்.

தங்களது மாநிலத்தில் நாளொன்றுக்கு 400 - 500 வரையான கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் சோதனை செய்யப்பட்டுவருவதாகவும் கொரோனா பரவல் குறித்து தமது அரசு மிகவும் அவதானத்துடன் செயற்பட்டுவருவதாகவும் தஸ்மேனிய சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தஸ்மேனியா- மெல்பேர்ன் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கும் என்றும் அவ்வாறு ஆரம்பிக்கும்போது  கொரோனா தொற்று குறைந்த மாநிலங்களை சேர்ந்த பயணிகள் மட்டுமே இதனூடாக அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now