SKIP TO MAIN CONTENT

இணையம் - தொலைபேசி சேவை தொடர்பான முறைப்பாடுகள் ஆஸ்திரேலியாவில் அதிகரிப்பு!

拨打911或将转至000
拨打911或将转至000 Source: Getty Images AsiaPac

1 min read

Published

Updated


Skip to article content

தொலைபேசி மற்றும் இணைய சேவை வழங்குநர்களைத் தொடர்புகொள்ள முடியாதிருப்பதாகத் தெரிவித்து ஆஸ்திரேலிய பயனாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முறைப்பாடுகளின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 1500 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று Telecommunications Industry Ombudsman தெரிவித்துள்ளது.

2019 - 2020 ஆம் ஆண்டு நிதியாண்டில் சுமார் 2000 வாடிக்கையாளர்கள் மிகுந்த விரக்தியடைந்து இவ்வாறு Telecommunications Industry Ombudsman அமைப்பிடம் நீதிகேட்டு முறைப்பாடு செய்திருக்கிறார்கள் என்று Telecommunications Industry Ombudsman வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ள தொலைபேசி - இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் தொலைபேசி  ஊடான வாடிக்கையாளர் உதவி மையங்கள் (call centres), வெளிநாடுகளில் கொரோனா சிக்கல் காரணமாக மூடப்பட்டுள்ளமையும் இதற்கு பிரதான காரணம் என்று Telecommunications Industry Ombudsman தெரிவித்துள்ளது.

இதுதவிர இணைய பயனாளர்களின் 42, 800 முறைப்பாடுகள் உட்பட ஒட்டுமொத்தமாக 127,000 முறைப்பாடுகள் தம்மிடம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் இவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் Telecommunications Industry Ombudsman தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now