SKIP TO MAIN CONTENT

Telstra கேபிளில் சேதம்: அவசர சேவைகள் பாதிப்பு!

The damaged cable pit east of Orange causing service interruptions.
The damaged cable pit east of Orange causing service interruptions. Source: Twitter: @Tesltra_news

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

Telstra-வின் முக்கிய கேபிள் தொகுதியொன்றை மின்னல் தாக்கிய காரணத்தினால் விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் - மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களின் அவசர அழைப்பு எண்(000) தொடர்புகள் பாதிக்கப்பட்டன.

Orange மற்றும் Bowral இடங்களுக்கு இடையில் அமைந்த கேபிள் தொகுதிக்கு இவ்வாறு சேதமடைந்த காரணத்தினால் பொலீஸ் - அம்புலன்ஸ் - தீயணைப்பு பிரிவுகளுக்கான தொடர்பு எண் சேவைகள் நேற்றிரவு முதல் தடைப்பட்டன என்று Telstra தெரிவித்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலிய அவசர எண் சேவைகள் இந்த கேபிள் துண்டிப்பினால் பாதிக்கப்பட்டபோதும் உடனடியாக அவை திருத்தப்பட்டுவிட்டன என்றும் ஆனால் விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் - மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களின் பல அவசர அழைப்பு எண் தொடர்புகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை திருத்தும் வேலைகளில் தங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈட்டுபட்டு வருகிறார்கள் என்றும் Telstra தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now