நாட்டின் பல பகுதிகள் கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்களின் நன்மைகருதி தமது payphones-இலிருந்து உள்நாட்டு அழைப்புக்கள் அனைத்தையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என Telstra நிறுவனம் அறிவித்துள்ளது.
மொபைல் அழைப்புகள் உட்பட ஆஸ்திரேலியாவுக்குள் எங்கும், எந்த இலக்கத்திற்கும் payphones-இலிருந்து இலவச அழைப்புக்களை மேற்கொள்ளமுடியும் என Telstra CEO Andy Penn அறிவித்தார்.
வீடற்ற நிலையில் இருப்பவர்கள், நிர்க்கதியானவர்கள் அல்லது ஆபத்தான சூழலிலிருந்து தப்பித்தவர்கள் என பலதரப்பட்டவர்கள் பணம்செலுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளமுடியாத நிலையில் இருக்கக்கூடும் என்பதால், தற்போதைய நெருக்கடி சூழலைக் கருத்திற்கொண்டு இம்முடிவினை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி நாடுமுழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 15 ஆயிரம் payphone-களில் எதிலிருந்தும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளமுடியும்.
கடந்த ஆண்டு இரண்டு லட்சத்தி 30 ஆயிரம் 000 அழைப்புகள் உட்பட சுமார் 11 மில்லியன் அழைப்புகள் இந்த 15 ஆயிரம் payphone-களிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளம், காட்டுத்தீ, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளின்போது payphone-களின் சேவை அளப்பரியதாக காணப்பட்டதென தெரிவித்த Telstra CEO Andy Penn, தற்போது கோவிட் பேரிடர் காலத்தில் தமது அன்புக்குரியவர்களுடன் பேச்சுத்தொடர்புகொள்வதற்கு, குறிப்பாக மொபைல் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியாதநிலையில் உள்ளவர்களுக்கும் இது உதவும் என கூறினார்.
Payphones ஊடாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளை இலவசமாக்குவதன் மூலம் தமது நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் சுமார் 5 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுமென Andy Penn தெரிவித்தார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
