SKIP TO MAIN CONTENT

உங்களுக்கு இப்படியான குறுஞ்செய்திகள் வந்தால் அழித்துவிடுங்கள்!

இணையத்திருடர்கள் நமது தொலைபேசிகள் மற்றும் கணினிகளுக்குள் ஊடுருவுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதால், இதுதொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Young man hands holding credit card and using phone.
Young man hands holding credit card and using phone. Don't be too quick to give your details to a scammer. Source: Getty Images

2 min read

Published

Updated


Skip to article content

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெவ்வேறு வகையில் கைபேசி குறுஞ்செய்தி ஊடாக மக்களைக் குறிவைக்கும் மோசடிக்காரர்கள், அண்மைக்காலமாக தமது செயற்பாட்டை பரந்தளவில் முடுக்கிவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக உங்களுக்கு பார்சல் ஒன்று வந்திருக்கிறது, அல்லது உங்களது முகவரியைக் கண்டுபிடிக்க முடியாததால் உங்களது பார்சல் காத்துக்கொண்டிருக்கிறது, உங்களது வீடியோ ஒன்று இந்த இணைப்பில் இருக்கிறது என்பதாக பல கோணங்களில் மோசடிக்காரர்கள் குறுஞ்செய்திகளை மக்களுக்கு அனுப்புகின்றனர்.

Scam
Source: SBS Tamil

இத்தகைய குறுஞ்செய்திகளை உடனடியாக அழித்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்குறுஞ்செய்தியை அழித்துவிடுவதற்குப் பதிலாக அதிலுள்ள இணைப்பினை அழுத்தினால், அதனூடாக உங்களது கைபேசியில் மோசடிக்காரர்களுக்குத் தேவையான செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.

Scam
Source: SBS Tamil

எனவே சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் உங்களுக்கு அனுப்பப்பட்டால் அவற்றிலுள்ள இணைப்புகளுக்குச் செல்லாமல் உடனடியாக அழித்துவிடுமாறு  Australian Competition and Consumer Commission- இன் Scamwatch வலியுறுத்தியுள்ளது.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now