SKIP TO MAIN CONTENT

தாய்லாந்தில் 20பேரை கொன்ற ராணுவ வீரரை ராணுவம் சுட்டுகொன்றது

தாய்லாந்தில் 20பேரை கொன்ற ராணுவ வீரரை ராணுவம் சுட்டுகொன்றது

Sergeant-Major Jakrapanth Thomma went on a shooting spree
Source: AAP

1 min read

Published

By Raysel

Source: SBS


Skip to article content

தாய்லாந்தில் 20 பேரை ராணுவத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் Sergeant-Major Jakrapanth Thomma  என்பவர் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டதாக தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது.

தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா எனும் நகரத்தில் வணிக வளாகத்தில் பொதுமக்களை நோக்கி Thomma கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருபது பேர் பலியானார்கள்; மேலும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்னர் Thomma ஒரு ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்களைத் திருடினார் என்றும் அவ்வேளையில்  தனது மூத்த அதிகாரியையும் அவர் சுட்டுக்கொன்றார் என்றும் கூறப்படுகிறது.

வணிக வளாகத்தில் பொதுமக்களில் குறைந்தது ஏழுபேரை பிணைக்கைதிகளாக Thommaவைப் பிடித்துவைத்திருந்தார் என்றும் அவர்களை மீட்க தாம் முயற்சித்தோம் என்றும், இந்த நடவடிக்கையின்போது  Thomma  சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் தாய்லாந்து ராணுவம் கூறுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான வணிக வளாகம் தற்போது பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் கோபமடைந்த Thomma இப்படியான துப்பாக்கிச்சூட்டில் இறங்கினார் என்று கூறப்படுகிறது.  


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now