SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய டொலர் வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளதா?

சுமார் 80 அமெரிக்க சத பெறுமதியாகவிருந்த ஆஸ்திரேலிய டொலர், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பிரித்தானிய (2%), யூரோ (1.3%) ஜப்பானிய (1.1%), ஏன் நியூசீலாந்து (0.6%) பண மாற்ற தொகையும் நேற்று முன்தினம் வீழ்ந்திருந்தாலும், நேற்றிரவு அமெரிக்க பணத்தைவிட மற்றைய பணமாற்ற விகிதங்கள் திடமாகியுள்ளன.

US Dollar
Australian Dollar falling in value? Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

Consumer Price Index (CPI) என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்குக் கொடுக்கும் விலை ஆஸ்திரேலியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளமை ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் வட்டி வீதம் இந்த வருட முடிவில் அதிகரிக்கப்படும் என சில அவதானிகள் கூறுகிறார்கள். ஆனால் அதிகரித்துவரும் வீட்டு விலைகள் காரணமாக வட்டி விகிதத்தை அதிகரித்தால் ஆஸ்திரேலிய பொருளாதாரம் வீழ்ச்சியைக் காணும் எனவே, அது அதிகரிக்காது என்று வேறு சில அவதானிகள் சொல்கிறார்கள்.

ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் இரும்புத்தாது விலை குறைந்து வருவது இன்னொரு முக்கிய காரணம். கடந்த மாதம் ஒரு தொன் இரும்புத்தாது அமெரிக்க டொலர் 60 ஆகக் குறைந்திருக்கிறது.

இவை மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்துவிட முடிவெடுத்ததுடன் அதன் பணம் வீழ்ச்சி கண்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட, அவர்களது பொருளாதாரம் வீழ்ச்சியைக் காணாதபடியால், அவர்களது பணத்தின் மதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன், வணிகங்களுக்கான வரி வீதத்தை அமெரிக்கா குறைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பணத்தின் மதிப்பும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மொத்தமாக, இவை எல்லாம் சேர்ந்து ஆஸ்திரேலிய பணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மதிப்பு குறைந்து கொண்டு செல்கிறது. எங்கே முடியும் என்று அவதானிகளால் இப்பொழுது சொல்ல முடியாமலிருக்கிறது.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now