கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்யும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.
இதன்படி சியெட்டலில் உள்ள ஆய்வு நிலையத்தில், சோதனை அடிப்படையிலான அந்தத் தடுப்பூசி முதன்முதலாக பெண் ஒருவருக்குப் போடப்பட்டது.
mRNA-1273 எனப்பெயரிடப்பட்ட இத்தடுப்பூசியை US National Institutes of Health (NIH) விஞ்ஞானிகளும் Moderna உயிரியல் தொழிநுட்ப நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
குறித்த தடுப்பூசி பரிசோதனை மனிதர்களில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு வெளியாக ஆகக்குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Share
