SKIP TO MAIN CONTENT

நவுறு,மனுஸ் அகதிகளுக்கு இசைக்கருவிகளை வழங்கும் ஆஸ்திரேலியர்கள்!

SBS
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

நவுறு மற்றும் மனுஸ் தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் இசைக்கருவிகள் பலவற்றை ஆஸ்திரேலியர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Music for Refugees என்ற அமைப்பின் நிறுவனர் Philip Feinstein, கடந்த சில மாதங்களுக்கு முதல் இசைக்கருவிகளை நன்கொடையாக வழங்குமாறு அழைப்புவிடுத்திருந்த நிலையில், இதற்கு செவிமடுத்த பல ஆஸ்திரேலியர்கள் 100 இசைக்கருவிகளை நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

Guitars, keyboards, clarinets, flutes, drum என பலவகைப்பட்ட இந்த இசைக்கருவிகள் இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கான் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இந்த இசைக்கருவிகள் அடுத்த வாரம் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான தபால் செலவை ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் Philip Feinstein தெரிவித்தார்.

Music for Refugees நிறுவனர் Philip Feinstein சிட்னி விலவூட் தடுப்பு முகாமுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு இசை வகுப்புக்களை மேற்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now