லேபர் அரசின் முக்கிய அமைச்சர்களும் அவர்களின் இலாகாக்களும்

வலுவான பெண் பிரதிநிதித்துவத்துடன் அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் தத்தமது பதவிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். Government Houseஇல் நடைபெற்ற இப்பதவிப்பிரமாண நிகழ்வில் 13 அமைச்சர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

cc

At the swearing-in of Australian Prime Minister Anthony Albanese's new ministry, 13 women were appointed to a ministerial role with a record 10 in the cabinet. Source: AAP

cc
Ed Husic and Anne Aly have become the first people of the Muslim faith sworn into the federal ministry. Source: AAP
Tanya Plibersek, Catherine King, Clare O'Neil மற்றும் Michelle Rowland ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட பெண்களில் அடங்குகின்றனர். அத்துடன் பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டுள்ள புதிய அமைச்சரவையில் Industry and Science - தொழிற்துறை மற்றும் அறிவியல் அமைச்சராக இஸ்லாமியப் பின்னணி கொண்ட Ed Husic பதவியேற்றுக்கொண்டார். இஸ்லாமியப் பின்னணி கொண்ட ஒருவர் Cabinet அந்தஸ்துள்ள அமைச்சராவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் early childhood education and youth - ஆரம்பக்கல்வி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சராக Anne Aly பதவியேற்றுள்ளார். இவர் இஸ்லாமியப் பின்னணி கொண்ட முதலாவது பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Deputy prime minister and defence minister, Richard Marles.
Deputy prime minister and defence minister, Richard Marles. Source: AAP
தெற்கு NSW தொகுதியான Eden-Monaroவின் நாடாளுமன்ற உறுப்பினர் Kristy McBain, Regional Development - பிராந்திய வளர்ச்சிக்கான அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு அமைச்சராக மார்க் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். NDIS எனப்படும் National Disability Insurance Scheme அமைச்சராக Bill Shorten தெரிவுசெய்யப்பட்டுள்ளார். Richard Marles, துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், Mark Dreyfus, Attorney-General ஆகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
cc
Foreign Affairs Minister Penny Wong. Source: AAP
வேலைவாய்ப்பு மற்றும் பணியிட உறவுகள் அமைச்சராக Tony Burke அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கலை தொடர்பிலான இலாகாவையும் பொறுப்பேற்றுள்ளார். Senate தலைவரான Penny Wong வெளியுறவு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Treasurer Jim Chalmers
Treasurer Jim Chalmers. Source: AAP
Treasurer - கருவூலக்காப்பாளராக Jim Chalmersம், நிதி அமைச்சராக Katy Gallagherம் அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மகளிர் அமைச்சு மற்றும் பொது சேவைகள் அமைச்சு ஆகியவையும் Katy Gallagherஇடம் கொடுக்கப்பட்டுள்ளன.
cc
Finance Minister Katy Gallagher with Australian Governor-General David Hurley during the swearing-in ceremony at Government House in Canberra. Source: AAP
நாட்டின் 31வது பிரதமராகப்  பதவியேற்ற பின்னரான முதலாவது கட்சிக் கூட்டத்தினைப் பிரதமர் Anthony Albanese நடத்தினார். அவரது தேர்தல் வெற்றி உரையைப் போலவே, ஒழுக்கம், கட்சி ஒற்றுமை மற்றும் தனித்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பிரதமரின் தலைமை உரையின் மையமாக இருந்தது. 
We need to change the way that politics works in this country. We need to be more inclusive, we need to be prepared to reach out, we need to be prepared to engage on those issues. We can do that in this parliament. My objective is to not keep this room as it is, my objective is to grow.
cc
Environment and Water Minister Tanya Plibersek. Source: AAP
நியூ சவுத் வேல்ஸ் தொகுதியான கில்மோரில், லேபர் கட்சி வேட்பாளர் Fiona Phillips வெற்றிபெற்றதன் மூலம் பெரும்பான்மை அரசிற்கான 76-ஆசன எல்லையைத் தாண்டிப் பிறிதொரு வெற்றியை பிரதமர் Albanese பெற்றுள்ளார். மீதமுள்ள விக்டோரியாவின்  டீக்கின் தொகுதிக்கான எண்ணும் பணி தொடர்கிறது.
cc
Trade and Tourism Minister Don Farrell. Source: AAP
இதேவேளை வரவிருக்கும் ஆண்டிற்கான தனது நிகழ்ச்சி நிரல் பற்றிப் பேசிய  பிரதமர் அல்பானீஸ், 47வது federal நாடாளுமன்றம் ஜூலை 26 ஆம் தேதி ஆரம்பமாகும் என்று அறிவித்தார்.
Employment Minister Tony Burke.
Employment Minister Tony Burke. Source: AAP
நாடாளுமன்றத்தில் பூர்வீகக் குடியினரின் குரல் உட்பட, உளுரு அறிக்கையை முழுமையாக செயல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன் national integrity commission ஆணையத்தை அறிமுகப்படுத்துவதற்கான தனது முன்னுரிமையையும் அவர் தெரிவித்தார். செனட்டர் Pat Dodson, special envoy for reconciliation - நல்லிணக்கத்திற்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உளுரு அறிக்கையை செயல்படுத்துதல் தொடர்பிலான பொறுப்பும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
cc
Health and Aged Care Minister Mark Butler with Australian Governor-General David Hurley during the swearing-in ceremony at Government House in Canberra. Source: AAP
இதேவேளை Linda Burney, Minister for Indigenous Australians - நாட்டின் பூர்வீக மக்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
cc
Indigenous Australians Minister Linda Burney. Source: AAP
பிரதமராகப் பதவியேற்றதும் Quad கூட்டத்துக்காக தனது ஜப்பான் பயணம் மற்றும் Penny Wongஇன் சாலமன் தீவுகளுக்கான பயணங்கள் பற்றித் தனது உரையில் பிரதமர் முன்னிலைப்படுத்தினார்.
We changed the statement that was made and they very much welcomed our changed position on climate change. We’re joining again the global effort which we needed to do after nine wasted years. And waste is what I want to talk about in two areas. I want to remind you that you shouldn’t waste a day in government. We don’t intend to.
Ministros de energía de Australia respaldan la adopción de energías renovables y apoyan plan para almacenar gas
Climate and Energy Minister Chris Bowen. Source: AAP
புதிய அரசானது குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொள்வதாகக் கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers தெரிவித்தார். தேசிய நிதிநிலையில் முன்னைய அரசானது பாரிய முரண்பாடுகளை விட்டுவிட்டனர் என்றும் அதனைச் சரிசெய்வதற்குப்   பல ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் கூறினார்.
You know, we think the first port of call is to trim spending. We've already proposed $11 billion in budget improvements a couple of days before the election so that's our priority.
cc
Infrastructure Minister Catherine King with Australian Governor-General David Hurley during the swearing-in ceremony at Government House in Canberra. Source: AAP
புதிய அமைச்சரவை:
  • Anthony Albanese - Prime Minister
  • Richard Marles - Deputy Prime Minister, Defence
  • Jim Chalmers - Treasurer
  • Katy Gallagher - Finance, Public Service, Women
  • Penny Wong - Foreign Affairs
  • Linda Burney - Indigenous Australians
  • Bill Shorten - National Disability Insurance Scheme, Government Services
  • Tony Burke - Employment and Workplace Relations, Arts
  • Tanya Plibersek - Environment, Water
  • Don Farrell - Trade and Tourism, Special Minister of State
  • Mark Butler - Health and Aged Care
  • Chris Bowen - Climate Change and Energy
  • Catherine King - Infrastructure, Transport and Regional Development, Local Government
  • Brendan O'Connor - Skills and Training
  • Mark Dreyfus - Attorney-General and Cabinet Secretary
  • Michelle Rowland - Communications
  • Julie Collins - Housing, Homelessness, Small Business
  • Jason Clare - Education
  • Clare O'Neil - Home Affairs and Cyber Security
  • Amanda Rishworth - Social Services
  • Ed Husic - Industry and Science
  • Murray Watt - Agriculture, Fisheries, Forestry and Emergency Management
  • Madeleine King - Resources and Northern Australia
  • Matt Keogh - Veterans' Affairs and Defence Personnel
  • Pat Conroy - Defence Industry, International Development and the Pacific
  • Stephen Jones - Assistant Treasurer and Financial Services
  • Andrew Giles - Immigration, Citizenship and Multicultural Affairs
  • Anne Aly - Early Childhood Education and Youth
  • Anika Wells - Aged Care and Sport
  • Kristy McBain - Regional Development, Local Government and Territories.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Published

Updated

By Praba Maheswaran

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand