SKIP TO MAIN CONTENT

செப்டம்பர் 22 விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது

பிரதமர் Anthony Albanese செப்டம்பர் 22 தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தார்.

QUEEN ELIZABETH II AUSTRALIA REAX
Australian Prime Minister Anthony Albanese arrives to sign a condolence book for the passing of Her Majesty The Queen at Parliament House in Canberra, Friday, September 9, 2022. Queen Elizabeth II has died peacefully at Balmoral Palace in Scotland after more than seven decades on the throne. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

1 min read

Published

Updated

By Raysel

Source: SBS


Skip to article content

நாட்டின் மகாராணியாக இருந்த அரசி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை பொதுவிடுமுறை தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் Anthony Albanese சற்று முன்னர் அறிவித்தார். அந்த நாள் National Day of Mourning for Her Majesty The Queen என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாம் அனைத்து மாநில ப்ரீமியர்கள், பிராந்திய முதலமைச்சர்களுடன் கலந்து பேசி இந்த முடிவை எட்டியதாகவும், இந்த பொதுவிடுமுறை அறிவிப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் என்றும் பிரதமர் Anthony Albanese தனது Twitter செய்தியில் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக தாம் அவர்களுக்கு இன்று காலை கடிதம் எழுதியதாகவும், அந்த கடிதம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் என்றும் பிரதமர் Anthony Albanese தனது செய்தியில் கூறியுள்ளார்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now