SKIP TO MAIN CONTENT

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கஸோ இஷிகுரோ

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இலண்டனைச் சேர்ந்த கஸோ இஷிகுரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய கஸோ இஷிகுரோ (62) பெறுகிறார்.

Kazuo Ishiguro
Kazuo Ishiguro Source: Wiki Commons

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

 கஸோ ஆங்கிலத்தில் பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். கஸோவின் முதல் புத்தகமான A Pale View of Hills - 1982 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

தனது சமீபத்திய நாவலில் விஞ்ஞான புனை கதை பாணியை கஸோ அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இதுவரை எட்டு நாவல்களை கஸோ  எழுதியிருக்கிறார்.

ஆங்கிலம் மட்டும் இல்லாமல் ஃபிரெஞ்சு மொழி  மற்றும் ஸ்பானிஷ்  மொழியிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

கஸோ  நாவல்கள், சிறுகதைகள் மட்டுமல்லாது  A Profile of Arthur J. Mason, The Saddest Music in the World போன்ற பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு குறித்த சுவையான தரவுகள்:

1901ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை, இலக்கியத்திற்காக 110 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்தப் பரிசு வாங்கிய பெண்கள் 14 பேர் மட்டுமே.  4 பரிசுகள் இருவரால் பகிரப்பட்டுள்ளன.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிய மிக இளமையான வயதானவர், ருட்யார்ட் கிப்ப்ளிங் (Rudyard Kipling), The Jungle Book என்ற நூலுக்குப் பிரபலமான இவர் பரிசு வாங்கும்போது வயது 41.

88 வயதான Doris Lessing என்ற பெண்மணி தான் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கிய வயதில் மூத்தவர்.  இவர் 2007ம் ஆண்டில் இந்தப் பரிசைப் பெற்றார்.  இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் சராசரி வயது 65.  இந்தப் பரிசைப் பெற்ற பலர் பிறந்தது ஜூன் மாதத்தில்.

1901ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பின்வரும் மொழிகளில் எழுதியிருக்கிறார்கள் அல்லது எழுதுகின்றனர்:

ஆங்கிலம் (English) 28

ஃபிரஞ்சு (French) 14

ஜெர்மன் (German) 13

ஸ்பானிஷ் (Spanish) 11

ஸ்வீடிஷ் (Swedish) 7

இத்தாலிய (Italian) 6

ரஷியன் (Russian) 6

போலிஷ் (Polish) 4

டேனிஷ் (Danish) 3

நார்வேஜியன் (Norwegian) 3

சீன (Chinese) 2

கிரேக்கம் (Greek) 2

ஜப்பனீஸ் (Japanese) 2

அரபு (Arabic) 1

பெங்காலி (Bengali) 1

செக் (Czech) 1

ஃபின்னிஷ் (Finnish) 1

ஹீப்ரு (Hebrew) 1

ஹங்கேரியன் (Hungarian) 1

ஐஸ்லென்டிக் (Icelandic) 1

ஒக்கிடன் (Occitan) 1

போர்த்துகீசியம் (Portuguese) 1

செர்போ-குரோசியம் (Serbo-Croatian) 1

துருக்கிய (Turkish) 1

இத்திஷ் (Yiddish) 1

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now