SKIP TO MAIN CONTENT

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த கேள்வி நீக்கப்படலாம்

பொதுமக்கள் அளித்துள்ள அதிகமான புகார்களினால், 2021ல் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த கேள்வி நீக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Australia census
Source: Seven Network

1 min read

Published

Updated

By Selvi



Skip to article content

அது என்ன கேள்வி என்று கேட்கிறீர்களா?

“உங்களின் மதம் என்ன?” என்பதுதான் அந்த கேள்வி.  ஏற்கனவே இக்கேள்விக்கு பதில் கூறுவது என்பது கட்டாயம் இல்லை என்ற போதிலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில் பலரின் பின்னூட்டலுக்கு பிறகு “மதம் இல்லை” என்பது முதலாவது தெரிவாக கொண்டுவரப்பட்டது.  இக்கணக்கெடுப்பில் 30 சதவீதமானவர்கள் தங்களுக்கு மதம் எதுவும் இல்லை என கூறியுள்ளனர்.  

மதம் குறித்து தற்போது கேட்கப்படும் கேள்வி இரண்டு கேள்விகளாக பிரித்து கேட்கப்பட வேண்டும் என பல பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.  முதல் கேள்வி “நீங்கள் மதம் ஒன்றை பின்பற்றுகிறீர்களா?” என்று இருக்க வேண்டும் என்றும் அதற்கு ஆம் என்று சொல்பவர்களுக்கு தாங்கள் பின்பற்றும் மதத்தினை தெரிவு செய்ய மதங்களின் பட்டியல் வழங்கப்பட வேண்டும் என பல பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைகளம் கூறியுள்ளது.  

இது குறித்து மக்கள் வழங்கும் பின்னூட்டங்களை 2018 மற்றும் 2019ல் பரிசீலித்து 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு முன் முடிவு செய்யப்படும் என ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைகளம் கூறியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now