நாட்டின் வட்டி வீதத்தில் மாற்றமில்லை - Reserve Bank அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அரசின் அதிகாரபூர்வ வட்டி விகிதம் 0.10% ஆகத் தொடரும் என்று Reserve Bank of Australia இன்று அறிவித்தது. பொருளாதாரத்தில் Covid-19 ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இதற்கு முக்கியகாரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Covid-19 காரணமாக அறிவிக்கப்பட்டிருக்கும் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், நாட்டின் பொருளாதாரம் முன்னேற குறைந்த வட்டி உதவும் என்று Reserve Bank of Australia நம்புகிறது.

A pedestrian walks past the Reserve Bank of Australia (RBA) head office in Sydney, Tuesday, September 7, 2021. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING

A pedestrian walks past the Reserve Bank of Australia (RBA) head office in Sydney, Tuesday, September 7, 2021. (AAP Image/Joel Carrett) Source: AAP

கடந்த 130 மாதங்களாக, Reserve Bank of Australia வட்டி வீதத்தை அதிகரிக்கவில்லை.  பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறிய படி, வட்டி வீதம் 0.1% என்ற நிலையில் தொடரும் என்று Reserve Bank சற்று முன் அறிவித்தது.
பணவீக்கம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் சமீபத்திய மாதங்களில் குறைந்துள்ளன
Inflation expectations have fallen in the recent months
Inflation expectations have fallen in the recent months Source: SBS Tamil
பணவீக்கம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் சமீபத்திய மாதங்களில் குறைந்துள்ளன என்று RBA கூறியுள்ளது.  இதனால், 2024 வரை மாற்றங்கள் இருக்காது என்று சிலர் எதிர்வு கூறியுள்ளனர்.

தொடர்ச்சியாக வட்டிவீதத்தில் அதிகரிப்பைக் காணாத மாதங்கள்

Consecutive months without a rate rise
Consecutive months without a rate rise Source: SBS Tamil
தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் வட்டி வீதத்தை உயர்த்தாத நாடு என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெறுகிறது.

Reserve Bank of Australia அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பால் நாட்டின் முன்னணி வங்கிகள் வீட்டுக் கடன் வைத்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது புதிய சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Kulasegaram Sanchayan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
நாட்டின் வட்டி வீதத்தில் மாற்றமில்லை - Reserve Bank அறிவிப்பு! | SBS Tamil