Perthல் உள்ள Bullsbrook புறநகரில் உள்ள மக்கள் குடிக்க, சமைக்க போன்ற தங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். Bullsbrookல் உள்ள கிட்டத்தட்ட 200 குடும்பங்களும் இவ்வாறு அவதிவுறுவதற்கு காரணம் அங்குள்ள மாசு தண்ணீர் என்று கூறுகின்றனர்.
தண்ணீரில் உள்ள நச்சு தன்மைக்கு பயந்து தங்களின் பிள்ளைகளை அதிக நேரம் குளிக்க வைப்பதற்கு கூட பயப்படுவதாக கூறுகிறார்கள் Bullsbrookல் வசிக்கும் ஒரு தம்பதியினர். இம்மாசு தண்ணீரை சுத்தம் செய்ய பல வருடங்கள் ஆகும் அதோடு பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று சொல்லப்படுகிறது.
மேற்கு ஆஸ்திரேலியா Pearce புறநகரில் உள்ள விமானத்தளத்தில் பயன்படுத்தப்பட்ட P-FAS இரசாயனம் அடங்கிய தீயணைப்பு நுரை இந்த தண்ணீர் மாசிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. நச்சு தன்மை வாய்ந்ததும் மற்றும் சிலவகை புற்றுநோய் காரணியாகவும் P-FAS இரசாயனம் கணிக்கப்பட்டுள்ளது.
2004 முதல் ஆஸ்திரேலியா முழுவதும் P-FAS இரசாயனம் அடங்கிய தீயணைப்பு நுரையினை பயன்படுத்த பாதுகாப்பு துறை தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
