SKIP TO MAIN CONTENT

உலக நாடக மேடை அறிமுகமாகிய நாள் !

சரியாக 400 வருடங்களுக்கு முன்னர், மே 20, 1570 அன்று உலகின் முதல் நவீன வரைபடம், உலகின் நாடக மேடை என்று பொருள்பட, "Theatrum Orbis Terrarum" என்ற இலத்தீன் மொழி தலைப்புடன் வெளியிடப்பட்டது. அதனை வரைந்தவர், ஆபிரகாம் ஒர்டெலியஸ். (Abraham Ortelius) என்ற பெரயருடைய பெல்ஜிய நாட்டு நில அமைப்பியல் மற்றும் நிலவரைபட வல்லுனர். அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், கூகிள் தனது முகப்பு பக்கத்தில் டூ கிறுக்கல் வரைபடமாக (doodle) வெளியிட்டுள்ளது.

Ortelius world map 1570
Ortelius world map 1570 Source: Creative Commons

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

1510ம் ஆண்டு ஏப்ரல் 4ம் நாள் பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப்  (Antwerp) நகரில் பிறந்த ஒர்டெலியஸ், தற்போது பாவனையில் உள்ள முதல் உலகப் படத்தை வரைந்தார்.  கண்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்ற தத்துவத்தை முதல் தடவையாக புவியியல் வரைபடங்கள் மூலம் முதலில் எடுத்துக்காடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Abraham Ortelius
Abraham Ortelius by Peter Paul Rubens Source: Creative Commons

ஒர்டெலியஸ் உருவாக்கிய புவியியல் வரைபடங்த்தின் முதல் பதிப்பில்  53 வரைபடங்கள் அமைந்திருந்தது.  இந்த வரைபடம் கடைசியாக வெளியிடப்பட்ட போது 167 வரைபடங்களுடன் கூடிய புவியியல் வரைபடமாக உருப்பெற்றிருந்தது.  கடைசிப் பதிப்பு 1622ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

நம்மில் பலர் கூகிள் வரைபடத்தை நம்பியே இன்னொரு இடத்திற்குப் பயணத்தைத் தற்போது மேற்கொள்கிறோம்.  ஒர்டெலியஸ் உருவாக்கிய வரைபடம், "அனைத்தையும் உண்மையிலேயே உலகளாவிய வகையில் பார்வையிட உதவியது" என்கிறது கூகுள்.

ஒரு மனிதநேயவாதி என நினைவுகூரப்படும் ஒர்டெலியஸ், டச்சு மொழி, ஃப்ரெஞ்சு, ஸ்பானிஷ், ஜேர்மன், இலத்தீன், இத்தாலிய மொழி, மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளை சிறு வயதிலிருந்து பேச வல்லவராக இருந்தார். பண்டைய இலக்கியம் மற்றும் வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இவர், விஞ்ஞானத்தில் ஏற்படும் வளர்ச்சியைத் தொடர்ந்து அவதானித்து வந்தார்.

அவரது சகோதரிகளைப் போலவே, ஓர்டெலியஸ் அவர்களும் தனது வாழ்வாதாரத் தேவைக்காக, வரைபடங்களை வண்ணமயமாக்குவது மற்றும் வரைபடங்களை வரைவது என்று சிறப்புப் பெற்றார். அவர் பழம்பொருட்கள், நாணயங்கள், வரைபடங்கள் மற்றும் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்து வந்தார் என்றும், ஒரு கட்டத்தில், அவற்றை வைப்பதற்கு இடம் போதாமல் ஒரு பெரிய வீட்டிற்குக் குடிபோக வேண்டியதாயிற்று என்றும் சொல்லப்படுகிறது.

 

 

 

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now