SKIP TO MAIN CONTENT

சமய (மத) நாட்டமுள்ள நாடுகள் எவை? மதத்தைப் புறந்தள்ளும் மக்கள் யார்?

கடந்த வார இறுதி யேசு கிறீஸ்த்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாட்களாக, உலகில் பலர் அவதானித்தார்கள். ஆம், ஈஸ்டர் என்பது வெறும் சாக்கலேட் சாப்பிடுவது பற்றி மட்டுமல்ல என்பதை எமது நேயர் சிறுவர்கள் கூறியதை நேற்றைய ஒலிபரப்பில் கேட்டிருப்பீர்கள். அதை முன்னிட்டு, இங்கிலாந்தில் வெளியாகும் Telegraph பத்திரிகை, உலகில் அதிக மத நம்பிக்கை கொண்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கைத் தீவிலுள்ள அனைவரும் (99%) மத நம்பிக்கை கொண்டவர்கள் என்று, இந்தப் பட்டியல் சொல்கிறது.

Religious Symbols
Religious Symbols Source: SBS

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: The Telegraph, UK



Skip to article content

2008, 2009 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தான் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாட்டின் நிலைப்பாடும், அந்தந்த நாட்டிலிருந்து பெறப்பட்ட மிகச் சமீபத்திய தரவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதிக மத நம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் நாடுகள்: 

  1. எத்தியோப்பியா   99%
  2. மலாவி    99%
  3. நைஜர்    99%
  4. இலங்கை    99%
  5. யேமன்    99%
  6. புருண்டி    98%
  7. ஜிபூட்டி    98%
  8. மவுரித்தேனியா    98%
  9. சோமாலியா    98%
  10. ஆப்கானிஸ்தான்  97%
  11. கோமரோஸ்    97%
  12. எகிப்து    97%
  13. கினி      97%
  14. லாவோஸ்     97%
  15. மியான்மார்   97%
  16. கம்போடியா   96%
  17. கமரூன்     96%
  18. ஜோர்டான்   96%
  19. செனகல்    96%
  20. சாட்      95%

(கானா, மாலி, கத்தார், காங்கோ, ருவாண்டா மற்றும் சாம்பியா குடியரசு 95%)

 

கீழேயுள்ள வரைபடத்திலிருந்து, ஒவ்வொரு நாட்டின் மத நிலைப்பாட்டை அறியலாம்.

மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவர் தான் மத நம்பிக்கை அதிகம் கொண்டவராக இருக்கிறார்.  அமெரிக்கர்களில் 56 சதவீதத்தினரும், 30 சதவீதமான பிரித்தானியரும் மத நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

மத நம்பிக்கை குறைந்தவர்கள் என்று பார்த்தால், ஜப்பான், எஸ்தோனியா, சுவீடன், நார்வே மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் வாழ்பவர்கள் முன் நிற்கிறார்கள்.  அவர்களை மிஞ்சி, ஏழு சதவீத சீன மக்கள் மட்டுமே மத நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

இந்தியர்களில் முக்கால் பேர் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 

மத நம்பிக்கை இல்லாத மக்கள் வாழும் 20 நாடுகள்:

  1. சீனா    7%
  2. ஜப்பான்  13%
  3. எஸ்டோனியா   16%
  4. ஸ்வீடன்  19%
  5. நார்வே  21%
  6. செக் குடியரசு  23%
  7. ஹாங்காங்   26%
  8. நெதர்லாந்து    26%
  9. இஸ்ரேல்   30%
  10. ஐக்கிய ராஜ்யம்  30%
  11. நியூசிலாந்து  33%
  12. ஆஸ்திரேலியா  34%
  13. அஜர்பைஜான்  34%
  14. பெலாரஸ்  34%
  15. கியூபா   34%
  16. ஜெர்மனி   34%
  17. வியட்நாம் 34%
  18. ஸ்பெயின் 37%
  19. சுவிச்சர்லாந்து   38%
  20. அல்பேனியா   39%

(ஆஸ்திரியா, ஹங்கேரி, லக்சம்பர்க் 39%)

 

மூலம்:  Oliver Smith, Digital Travel Editor, The Telegraph, UK.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now