SKIP TO MAIN CONTENT

2018ல் உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் யார் தெரியுமா?

forbes
Source: forbes

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான Forbes இதழ் வெளியிட்டிருக்கிறது.

தமது நடவடிக்கைகளால் உலகின் போக்கை மாற்றக்கூடியவர்கள் என்ற வகையில், வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத் திறமைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து Forbes இதழ் பட்டியல் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், 2018ம் ஆண்டின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் சீன அதிபர் Xi Jinping முதல் இடத்தில் உள்ளார். இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த ரஷ்ய பிரதமர் Vladimir Putin 2வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் Trump 3வது இடத்திலும், ஜெர்மனி பிரதமர் Angela Merkel 4வது இடத்திலும், அமேசான் தலைவர் Jeff Bezos 5வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியப் பிரதமர் மோடி 9வது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி 32வது இடத்திலும், ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg 19வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் Theresa May 14வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now